ஞாயிறு, 26 ஜனவரி, 2014

திங்கள், 2 டிசம்பர், 2013

சனி, 28 செப்டம்பர், 2013

மாற்றுமத தாவா

இளையான்குடி கிளை சார்பாக ஹஜ் பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக 22/09/13 அன்று ஹஜ் பயிற்சி நடைபெற்றது இதில் ஹஜ் பயணிகள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்
பயிற்சி அளித்தவர் :சகோ :m.s.சுலைமான்,(மாநில மேலாண்மைகுழு உறுபினர்) நாள் :22/09/13, நேரம்:காலை 10:30, இடம்:இளையான்குடி சமுதாய கூடம்,அல்ஹம்துலில்லாஹ்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கிளை சார்பாக 22-09-2013 , அன்று ஜனவரி 28 இட ஒதுக்கீடை வெல்ல சிறை செல்லும் போராட்டத்திற்க்கான பேனர் வைக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தேவகோட்டை கிளையில் தெருமுனை பிரச்சாரம்

தெருமுனை பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக 21.09.2013 அன்று மாலை யார் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மது வட்டி விபச்சாரம் தாயத்து பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது இதில் திருச்சி அப்துல் ரஹ்மான் உரையாற்றினார்

புதன், 14 ஆகஸ்ட், 2013

இன்ஷா அல்லாஹ் ..........
காரைகுடியில் நடைபெரும் இந்த பொதுகூட்டம் நேரடி
 http://tntjsivagangai.blogspot.in/
 ஒளிபரப்பு செய்யபடும்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு


நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)

திங்கள், 21 ஜனவரி, 2013

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 19, 2013, 19:11
குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.
தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.
டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.
போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.
பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?
ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?
சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.
சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.
டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.
இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.
அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.
அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.
ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் சட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.
குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?
லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.
அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?
கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?
இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில்மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?
சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.
கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்? மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.
கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.
மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.
இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வெளியீடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Print This page

புதன், 9 ஜனவரி, 2013

சிறைநிரப்பும் போராட்டம் வாபஸ்!


காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – சிறைநிரப்பும் போராட்டம் வாபஸ்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, January 8, 2013, 12:01
முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்று சிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
மாநிலப் பொதுச் செயலாளர்
Print This page

இராஜகம்பீரம் கிளை புதிய நிர்வாகிகள்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரம் கிளை பொதுக்குழு மாவட்ட துணை செயலாளர் சாகுல் தலைமையில் நடைபெற்றது இதில் கீழ் கண்ட  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் 
  பெயர்                   பொருப்பு                   செல் நம்பர்
A.முஹமது ஹனிபா  -   தலைவர்          -        9500028605
N.தமிம் முஸ்தபா     -   செயளாலர்        -        9566716499
D.அபுதாஹிர்          -   பொருளாலர்      -        9944885805
S.முஹமது ரியாஸ்   -   துணை தலைவர்  -        9952756381
M.சாகுல்              -   துணை செயளாலர் -       9841941744
P.மதார் சிக்கந்தர்      -   மாணவரணி       -          - NO -

வெள்ளி, 28 டிசம்பர், 2012

காவல்துறை மிருகங்களை கண்டித்து அவசர தந்தி அனுப்ப வேண்டி வாசகங்கள்!


பின் வரும் வாசகம் அடங்கிய அவசர தந்தியை அனைவரும் இதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம் (வெளிநாட்டு சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மின்னஞ்சல் முகவரி மற்றும் ஃபேக்ஸ் நம்பர் சேர்க்கப்பட்டுள்ளது)
Subject: Request to take action against crime practicing police officers
Please take action against Mr.Senthil Kumaran, Assistant commissioner of police, Triplicane, Chennai and Mr.Giri D.C., Chintadripet who unlawfully entered Muslims’ houses by midnight, abused Muslim women and arrested innocent Muslims, also made lathi-charge against Muslims who condemned this criminal offense of the police.
முதலமைச்சர் முகவரி  :
Chief Minister’s Special Cell
Secretariat, Chennai 600 009
E-mail : cmcell@tn.gov.in
FAX : 044- 25676929
கவர்னர்
Dr. K. Rosaiah
Governor  of  Tamil Nadu
Raj Bhavan, Chennai – 600 022
Fax : +91-44-22350570
E-mail : govsec@tn.nic.in
தலைமை செயலாளர் : Chief Secretary
Thiru Debendranath Sarangi IAS
Chief Secretary to Govt
Secretariat, Chennai – 600 009
Fax     : 044-25672304
E-Mail : cs@tn.gov.in
உள்துறைச் செயலர் : Home Secretary
Thiru R Rajagopal IAS
Principal Secretary to Government,
Secretariat, Chennai – 600 009
Email :     homesec@tn.gov.in
Fax : 044- 25670596
டிஜிபி
Mr. K. Ramanujam, IPS
Director General of Police
Chief Office, Dr. Radha Krishnan Salai, Chennai – 600 004.
E-mail : phq@tn.nic.in
FAX 044-28447703e

வெள்ளி, 2 நவம்பர், 2012

குர்பானி இறைச்சி விநியோகம்

சிவகங்கை மாவட்டம் சாலையூர் கிளை சார்பாக 4 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது.

குர்பானி இறைச்சி  ஏழைகளுக்கு முறையாக விநியோகம் செய்யப்பட்டது.

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

குர்பானி இறைச்சி விநியோகம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக 5 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது.

குர்பானி இறைச்சி  ஏழைகளுக்கு முறையாக விநியோகம் செய்யப்பட்டது.

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

திடல் தொழுகை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி கிளை சார்பாக 

இளையான்குடி சம்சு தெரு அருகில் உள்ள அபுல்  கலாம் அசாத் நகர் திடலில்

நபிவழியில் ஹஜ்ஜுப் பெருநாள்  திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்களும் பெண்களுமாக இருநூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

சகோதரர் பாசித் அஹமது அவர்கள் இப்ராஹீம் நபியின் கொள்கை உறுதி என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

செவ்வாய், 30 அக்டோபர், 2012

தனிநபர் தாவா

சிவகங்கை மாவட்டம்  திருபுவனம் கிளையில்28/10/12 அன்று  தனிநபர் தாவா நடைபெற்றது ஏகத்துவத்தை பற்றி எடுத்து கூரப்பட்டது

தனிநபர் தாவா

சிவகங்கை மாவட்டம்  திருபுவனம் கிளையில்24/10/12 அன்று  தனிநபர் தாவா நடைபெற்றது ஏகத்துவத்தை பற்றி எடுத்து கூரப்பட்டது

திங்கள், 29 அக்டோபர், 2012

திடல் தொழுகை

சிவகங்கை மானாமதுரை கிளையில்27/10/12 அன்று  ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இதில் எராளமான அண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் இதில்  சகோ உமர் பாருக் உரை நிகல்தினார்கள் 

சனி, 27 அக்டோபர், 2012

விழிபுணர்வு மெஹாபோன் பிரச்சாரம்


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளையில்21/10/12 அன்று  டெங்கு காய்ச்சல் பற்றி மானாமதுரையில் உள்ள பதினைந்து தெருக்களில் விழிபுணர்வு மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில்  சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள்

வியாழன், 25 அக்டோபர், 2012

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி கிளை சார்பாக 22-10-2012 அன்று
இளையான்குடி மெயின் பஜாரில்  தெருமுனைப்  பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc,  அவர்கள் "மத்ஹபு வழியும் மாநபி வழியும்"
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வியாபாரிகளும் அஜரத்களும் இளைஞர்களும் கடைகளில்
அமர்ந்தபடி பயானைக் கேட்டு பயனடைந்தனர்.

பயானைத் தொடர்ந்து பலர் நமது பிரட்சாரங்களை பாராட்டி சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். . !

பெண்கள் பயான்

சிவகங்கை கிளையில் 20/10/12அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் எராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள் 

தனிநபர் தாவா

சிவகங்கை கிளையில் 20/10/12 அன்று வீடு வீடாக சென்று  பெண்களுக்கான தனிநபர் தாவா நடைபெற்றது இதில் சிர்க் பித்ஆத் பற்றி கூரப்பட்டது  

ஆண்களுக்கான பயான்

சிவகங்கை கிளையில் 21/10/12 அன்று ஆண்களுக்கான பயான் நடைபெற்றது இதில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் 

விழிப்புணர்வு பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம்21/10/12 அன்று  சக்கந்தி கிளை சார்பாக டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் எட்டு இடகளில்  நடைபெற்றது இதில் சகோ உமர் பாருக் உரையாற்றினார்கள் 

தர்பிய

 சிவகங்கை மாவட்டம்தில் 21/10/12 அன்று சிவகங்கை மஸ்ஜித் அக்சா பள்ளிவாசளில்  தாய்களுக்கான தர்பிய நடைபெற்றது இதில் மாவட்ட தாய்கள் கலந்து கொண்டார்கள் சகோ ஓலி அவர்கள் உரையாற்றினார்கள் 

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி கிளை சார்பாக 21-10-2012 அன்று இளையான்குடி பக்கீர் ராவுத்தர் தெருவில் தெருமுனைப்  பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc,  அவர்கள் "மறுமையை அஞ்சுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஏராளமான பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பயானைக் கேட்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ். . !

தெரு முனை பிரச்சாரம்


சிவகங்கை மாவட்டம்  இளையான்குடி சாலையூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாலையூர் கிளை சார்பாக 20-10-2012 அன்று தெரு முனை பிரச்சாரம் நடை பெற்றது.

மத்ஹபு வழியும் மாநபி வழியும் என்ற தலைப்பில் சகோதரர் பாசித் அஹமது, Bsc. அவர்கள் உரையாற்றினார்,
இதில் மத்ஹபில் உள்ள பின்பற்ற முடியாத சட்டங்களும் பின்பற்ற முடிந்தும் மக்கள் பின்பற்றாத சட்டங்களையும் எடுத்துக் கூறி இஸ்லாம் இது குறித்து என்ன  சொல்கிறது  என்றும் மாற்று மத நண்பர்களுக்கும் புரியும் விதமாக எடுத்துக் கூறினார்.

இதை ஏராளமான மக்களும் இளைஞர்களும் கேட்டு பயனடைந்தனர்,

பயான்  முடிந்த  உடன் பல இளைஞர்கள் சகோதரர் பாசித் அவர்களை சுற்றி வளைத்து தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

நோட்டீஸ் தாவா

சிவகங்கை மாவட்டம் மாணவரணி சார்பாக கூகுல்லை புறகணிப்போம் என்ற தலைப்பில் 5000 நோட்டீஸ் மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது 

புதன், 24 அக்டோபர், 2012

பெண்கள் பயான்


சிவகங்கை மாவட்டம் புதுவயலில்21/10/12 பெண்கள் பயான் நடைப்பெற்றது வஜிராஆலிமா உரையற்றினார் தலைப்பு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை

மெஹாபோன் பிரச்சாரம்

சிவகங்கை கிளையில் 17/10/12 அன்று அம்பேத்கார் நகரில் மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள்

மெஹாபோன் பிரச்சாரம்

சிவகங்கை கிளையில் 17/10/12 அன்று மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது வரதச்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் 

மாற்றுமத அழைப்பு

சிவகங்கை கிளையில் 17/10/12 அன்று  மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை குறித்து சொல்லபட்டது 

விழிப்புணர்வு பிரச்சாரம்


சிவகங்கை கிளையில் 17/10/12அன்று டெங்கு காய்ச்சல் பற்றி சிவகங்கை நகராட்சி இனைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் ஐம்பதுபேர் பயன்பெற்றனர் 

புதன், 17 அக்டோபர், 2012

தனிநபர் தாவா

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை யில்14 /10/12 அன்று தனிநபர்   தாவா  நடைபெற்றது இதில் மஸ்தான்  என்பவருக்கு ஏகத்துவ கொள்கை குறித்து விளக்கப்பட்டது

தனிநபர் தாவா

 சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிளையில் 09/10/12 அன்று தனிநபர் தாவா  நடைபெற்றது இதில் அலாவுதீன் என்பவருக்கு ஏகத்துவ கொள்கை குறித்து விளக்கப்பட்டது