மாவட்ட-நிகழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவட்ட-நிகழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜூலை, 2011

புதுவயலில் டாஸ்மாக்(7538) கடையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் புதுவயலில் 28.07.2011 அன்று இரண்டாவது முறையாக டாஸ்மாக்(7538) கடையை கண்டித்து கண்டனம் மற்றும் ஆர்ப்பாட்டம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. எதிர்வரும் 30.07.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இன்ஷாஅல்லாஹ்.

திங்கள், 25 ஜூலை, 2011

கிராமங்களுக்கு சென்று தாவா செய்ய ஆம்னி வேன்



சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களுக்கு சென்று தாவா செய்ய 25.07.2011 அன்று மாருதி ஆம்னி வேன் வங்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ் !

மாவட்டம் சார்பாக ரமலான் சகர் நேர நிகழ்ச்சி போஸ்டர் கிளைகளுக்கு விநியோகம்


சிவகங்கை மாவட்டம் சார்பாக (25.07.2011) ரமலான் சகர் நேர நிகழ்ச்சிக்கு 500 போஸ்டர் அடித்து கிளைகளுக்கு கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

வெள்ளி, 15 ஜூலை, 2011

சிவகங்கை மாவட்ட செயல்பாடுகள்


சிவகங்கை மாவட்ட பொதுக்குழு அழைப்பு

புதுவயலில் டாஸ்மாக் கடையை கண்டித்து


சிவகங்கை மாவட்டம் புதுவயலில் டாஸ்மாக் கடையை கண்டித்து TNTJ சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!

வியாழன், 14 ஜூலை, 2011

சிவகங்கை மாவட்டம் சார்பாக பராத் இரவு நோட்டிஸ்

சிவகங்கை மாவட்டம் சார்பாக - மார்க்கத்திற்கு முரணான பராத் இரவு சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிஸ் கிளைகள் தோறும் வழங்கப்பட்டது. மொத்தம் 5000 அடித்து கிளைகள் தோறும் கொடுக்கப்பட்டு வீடு தோறும் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 10 ஜூலை, 2011

பேச்சளார் பயிற்சி முகாம்



சிவகங்கை மாவட்டம் தாயிக்கள் பேச்சளார் பயிற்சி முகாம் 10.7.2011 அன்று சிவகங்கையில் நடைப்பெற்றது. மாநிலப் பேச்சளார் கபூர் மிஸ்பாகி கலந்துக்கொண்டு பயிற்சி வகுப்பை நடத்தினார், அல்ஹம்துலில்லாஹ் !

சனி, 9 ஜூலை, 2011

இடைக்காட்டூரில் கிளை ஆரம்பம்

சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் 09.07.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாகிகள் தெர்ந்தேடுக்கப்பட்டனர், அல்ஹம்துலில்லாஹ் !

இப்ராஹீம்-தலைவர், நல்லமுஹம்மது-செயலாளர், அக்பர்-பொருளாளர், கமாலூதீன் -துணைத்தலைவர், ஹனிபா-துணைச்செயலாளர்.

இதில் மாவட்டப் பொருளாளர் ஷாஜகான்மற்றும் மருத்துவ அணிச் செயலாளர் உமர் அகியோர் கலந்துக் கொண்டானர்.

திங்கள், 27 ஜூன், 2011

மாணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்தா அணிந்த வந்த மாணவியை T.C. கொடுத்து அனுப்பிய சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நகர முழுதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. உளவுத்துறைக்கும் தகவல் தரப்பட்டது.

இதற்குப் பிறகு பள்ளி நிர்வாகம் தங்களுடைய தவறை உணர்ந்தது பேச்சுவார்த்தைக்கு நகரில் உள்ள ஒரு காங்கிரஸ் பிரமுகர் மூலம் அழைப்பு விடுத்தனர். இன்று 27/06/2011 காரைக்குடி நிர்வாகிகள் பெற்றோரையும் உடன் அழைத்து சென்றனர். அங்கு சென்று பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் தவறுகளை சுட்டி காட்டப்பட்டது.

தவறாக பேசிய ஆசிரிய்ர் மீது நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் வாக்குறுதி அளித்தது. T.C கொடுக்கப்பட்ட மாணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்து கொள்வதாகவும், பள்ளி வளாகத்தில் முஸ்லிம் மாணவிகள் பர்தா உடை மாற்றுவதற்கு அறை ஒன்றும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்கள்.

பின்பு தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் தமிழக்கம் கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

வெள்ளி, 24 ஜூன், 2011

சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்புகுழு கூட்டம்



அல்லாஹ்வின் பேரருளால் 24-06-2011 அன்று காலை 9-30 TNTJ ரியாத் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் சகோதரர் காஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் தற்பொழுது பொருளாளர் பொறுப்பில் உள்ள சகோதரர் முகமது அலி, வரவு செலவு கணக்கை வாசித்தார் ,செயளாலர் சகோதரர் சாகுல் மாவட்ட செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார், சகோதரர் முபாரக் [சிங்கம்புனரி] உணர்வு அலுவலகம் பற்றி விவரித்தார், சகோதரர் பஷீர் மொளவி “அல்லாஹ்வின் வல்லமையும் மறுமையின் நிலையும்” என்ற தலைப்பிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்தினார்.

இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

1. ம ம க வின் அராஜகத்தால் பூட்டபட்டுள்ள உணர்வு அலுவலகத்தை மீட்க இன்ஷாஅல்லாஹ் சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் சிறப்பாக நடத்தவும், அதில் மாவட்டதை சேர்ந்த அதிகமான மக்களை திரட்டி அழைத்து செல்ல வேண்டும் என இந்த ஒருங்கிணைப்புகுழு கேட்டு கொள்கிறது.

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சிவகங்கை மாவட்ட சார்பாக செய்துவரும் NON-முஸ்லிம் தாவாவிற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்புகுழு சார்பாக சகோதரர் PJ உரையாற்றிய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற DVD ஓர் வருடத்திக்கு 1000 DVD வழங்குவது என்று தீர்மானிக்கபட்டது.

3. சிங்கம்புணரியிலும் , கொங்கம்பட்டியிலும், TNTJ கிளை தொடங்குவது சம்மந்தமாக , சகோதரர் கொங்கம்பட்டி முஸ்தபாவை தொடர்பு கொண்டு இன்ஷாஅல்லாஹ் கிளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அதற்கான உதவிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு செய்து தரும் என்று தீர்மானிக்கபட்டது.

ரியாதிலிருந்து செய்தியாளர் காரை. ஹமீது..

புதன், 22 ஜூன், 2011

பத்திரிகை செய்தி


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல். அல்ஹம்துலில்லாஹ் !

ஞாயிறு, 5 ஜூன், 2011

தாயீக்களின் கூட்டம்



நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் சிவகங்கை மாவட்ட தாயீக்களின் கூட்டம் கடந்த 5.6.11 நடைபெற்றது. இதில் தாயிக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

செவ்வாய், 31 மே, 2011

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா ?

சிவகங்கை மாவட்டம் சார்பாக 31.05.2011 அன்று “இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை” என்பதை வெளி உலகுக்கு சொல்லும் விதமாக நோட்டீஸ் தாவா செய்யப்பட்டது. இதில் 4000 நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை !

சிவகங்கை மாவட்டம் சார்பாக 31.05.2011 அன்று “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ன ?” என்பதை வெளி உலகுக்கு சொல்லும் விதமாக நோட்டீஸ் தாவா செய்யப்பட்டது. இதில் 3000 நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

செவ்வாய், 24 மே, 2011

மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக கடந்த 24-5-11 அன்று ஏழை சகோதரர் மனைவியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

செவ்வாய், 17 மே, 2011

மருத்துவ அணி மஷூரா

சிவகங்கை மாவட்டம் மருத்துவ அணியின் சார்பில் மஷூரா 17.5.11 அன்று நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளின் மருத்துவ அணி செயலாளர்கள் கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ் !!

வெள்ளி, 13 மே, 2011

அல்ஹம்துலில்லாஹ் !

ஏப்ரல் மாத தாவா மற்றும் மார்க்க பணிகளில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.


ஏப்ரல் மாத தாவா மற்றும் மார்க்க பணிகளில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

புதன், 20 ஏப்ரல், 2011

கோடைகால பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 20-4-11 அன்று இனிதே துவங்கியது, அல்ஹம்துலில்லாஹ்.




மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 125 மாணவியர்களும் 92 மாணவர்ளும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி கடந்த 29-4-11 அன்று நடைபெறும் இன்ஷாஅல்லாஹ். தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.

சனி, 9 ஏப்ரல், 2011

கோடைகால பயிற்சி முகாம்


சிவகங்கை மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக தேவகோட்டையில்\ கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது இன்ஷாஅல்லாஹ். தங்கள் பகுதியில் உள்ள மாணவ/மாணவிகளை உடனடியாக இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் அடைய செய்யுங்கள்.