

அல்லாஹ்வின் பேரருளால் 24-06-2011 அன்று காலை 9-30 TNTJ ரியாத் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் சகோதரர் காஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் தற்பொழுது பொருளாளர் பொறுப்பில் உள்ள சகோதரர் முகமது அலி, வரவு செலவு கணக்கை வாசித்தார் ,செயளாலர் சகோதரர் சாகுல் மாவட்ட செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார், சகோதரர் முபாரக் [சிங்கம்புனரி] உணர்வு அலுவலகம் பற்றி விவரித்தார், சகோதரர் பஷீர் மொளவி “அல்லாஹ்வின் வல்லமையும் மறுமையின் நிலையும்” என்ற தலைப்பிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்தினார்.
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது, அல்ஹம்துலில்லாஹ் !
1. ம ம க வின் அராஜகத்தால் பூட்டபட்டுள்ள உணர்வு அலுவலகத்தை மீட்க இன்ஷாஅல்லாஹ் சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் சிறப்பாக நடத்தவும், அதில் மாவட்டதை சேர்ந்த அதிகமான மக்களை திரட்டி அழைத்து செல்ல வேண்டும் என இந்த ஒருங்கிணைப்புகுழு கேட்டு கொள்கிறது.
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சிவகங்கை மாவட்ட சார்பாக செய்துவரும் NON-முஸ்லிம் தாவாவிற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்புகுழு சார்பாக சகோதரர் PJ உரையாற்றிய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற DVD ஓர் வருடத்திக்கு 1000 DVD வழங்குவது என்று தீர்மானிக்கபட்டது.
3. சிங்கம்புணரியிலும் , கொங்கம்பட்டியிலும், TNTJ கிளை தொடங்குவது சம்மந்தமாக , சகோதரர் கொங்கம்பட்டி முஸ்தபாவை தொடர்பு கொண்டு இன்ஷாஅல்லாஹ் கிளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அதற்கான உதவிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு செய்து தரும் என்று தீர்மானிக்கபட்டது.
ரியாதிலிருந்து செய்தியாளர் காரை. ஹமீது..