தேவகோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவகோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 26 ஜூலை, 2011
தேவக்கோட்டையில் பெண்கள் பயான் -அப்துல் கரீம் (M.I.S.C) உரை
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் 26.07.2011 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. மாணவர் அப்துல் கரீம் (M.I.S.C) உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.
சனி, 23 ஜூலை, 2011
தேவகோட்டையில் பெண்கள் பயான் -முஹ்மினா ஆலிமா உரை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 23.07.2011 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. முஹ்மினா ஆலிமா உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.
வியாழன், 14 ஜூலை, 2011
தேவகோட்டையில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 40 ஆயிரம் நிதியுதவி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 14.7.11 அன்று ஒரு பெண்மணிக்கு கடனிலிருந்து மீள்வதற்க்கு ஜக்காத் தொகையிலிருந்து ரூ.40,000/- (ரூபாய் நாற்பது ஆயிரம்) வாழ்வதார உதவியாக கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !
சனி, 9 ஜூலை, 2011
தேவகோட்டையில் கல்வி உதவி


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 9.7.11 அன்று சுமார் 20 மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. பின்பு தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது. சகோதரர் மக்தும் உரையற்றினார், அல்ஹம்துலில்லாஹ் !
சனி, 25 ஜூன், 2011
தேவகோட்டையில் பெண்கள் பயான்
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் 25.06.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரர் மக்தும் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ் !
தேவகோட்டையில் தாவா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 26.06.2011 அன்று கடை வீதியில் இஸ்லாம் குறித்து நோட்டிஸ் கொடுத்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!
சனி, 21 மே, 2011
புதன், 18 மே, 2011
பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 18.5.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
வியாழன், 12 மே, 2011
நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையின் சார்பாக கடந்த 5-12-2010 அன்று குணங்குடியைச் சேர்ந்த ருக்கையா என்ற பெண்ணிற்கு ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.
புதன், 27 ஏப்ரல், 2011
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைடையில் கடந்த 27-4-11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திங்கள், 25 ஏப்ரல், 2011
பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 25-4-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அர்சத் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 10 ஏப்ரல், 2011
தேவகோட்டையில் உள்ளதுறை அமைச்சர் ப . சிதம்பரத்திற்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் கடந்த 11-4-11 அன்று சட்டமன்றம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் ப .சிதம்பரம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
புதன், 30 மார்ச், 2011
நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 30-3-11 அன்று ஏழை சகோதரருக்கு 40,000/- (ரூபாய் நாற்பது ஆயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
வெள்ளி, 11 மார்ச், 2011
நிதியுதவி
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கிளையின் சார்பாக கடந்த 11-3-11 அன்று சகோதரருக்கு ரூபாய் 40,000/- (ரூபாய். நாற்பது ஆயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
தேவகோட்டையில் பெண்கள் தர்பியா
அல்லாஹ்வின் பேரருளால் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெண்கள் தர்பியா 27.02.11 அன்று அசர் முதல் மஹ்ரிப் வரை நடைபெற்றது, தர்பியா வழங்கியவர் சகோ முஜாஹீத் புதுகோட்டை மாவட்ட பேச்சளர்,ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்
ஞாயிறு, 6 மார்ச், 2011
தேவகோட்டையில் ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கிளையில் கடந்த 4-3-11 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக நேற்று (27-02-2011) பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் முஜாஹிதீன் அவர்கள் சிறப்புறையாற்றினார். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 30 ஜனவரி, 2011
பிறசமய மக்களிடம் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 30-1-11 அன்று பொது இடங்களில் பிறசமய மக்களிடம் தஃவா செய்யப்பட்டது. மேலும் தொழிலாளர்கிடையே இஸ்லாம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
வெள்ளி, 3 டிசம்பர், 2010
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 3.12.2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநிலத் தலைவர் சகோ. பக்கீர்முஹம்மது அல்தாபி கலந்துகொண்டு மார்க்கம் மற்றும் இயக்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
வியாழன், 18 நவம்பர், 2010
ஹஜ் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் நேற்று (18-11-2010) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
