இரு-பெருநாட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரு-பெருநாட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2010

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் நேற்று (18-11-2010) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.

புதன், 17 நவம்பர், 2010

கூட்டுக் குர்பானி


நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையின் சார்பாக ஒன்பது மாடுகள் (மொத்தம் எழுபது சகோதர்களின் கூட்டு) குர்பானி கொடுக்கப்பட்டது. குர்பானிக் கறி நகர முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை



நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் நவம்பர் 18, 2010 காலை 7.00 மணிக்கு ஹஜ் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது (மழை காரணமாக திடலில் நடக்கவிருந்த தொழுகை வீட்டு மாடிக்கு மாற்றப்பட்டது). முதலாவதாக பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தை முடித்த பிறகு சகோதரர் முனீப் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

நோன்புப் பெருநாள் திடல் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜஅமாத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கிளையில் செப்டம்பர் 10, 2010 அன்று நோன்புப் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. முதலாவதாக பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தை முடித்த பிறகு சகோதரர் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் 200க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்..

பித்ரா விநியோகம்




செப்டம்பர் 9, 2010: நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி) கிளையில் நோன்பு பெருநாள் தர்மம் பித்ராவை கூட்டாக வசூலித்து சுமார் 45,000 ருபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் தகுதியுள்ள 350 ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
(குறிப்பு: ஒரு ஸாஉ என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)

பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன் இந்த தர்மத்தை வழங்கிவிட வேண்டும், பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்கக் கூடாது. பித்ரா திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கு புகாரி 3275, 5010 ஹதீஸ்கள் ஆதரமாக அமைந்துள்ளது.

ரமலான் மாத சிறப்பு நிகழ்வுகள்

தினந்தோறும் இப்தார் ஏற்பாடு
நமது கிளையில் ரமலான் முழுவதும் நோன்பாளிகள் சரியான நேரத்தில் நோன்பு திறப்பதற்கு வசதியாக தினந்தோறும் இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, சுமார் 50 சகோதரர்கள் கலந்து கொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


நோன்புக் கஞ்சி
நமது கிளை சகோதரர்களுக்கு ரமலான் முழுவதும் நோன்புக் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.


இரவுத் தொழுகை ஏற்பாடு
நமது கிளையில் ரமலான் முழுவதும் நபி வழியில் அழகிய முறையில் இரவுத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது, திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

அருள்வளம் மிக்க மாதம்

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904.


மனிதர்கள் செய்யும் நற்செயலுக்கான கூலி பத்திலிருந்து எழுநூறு மடங்காக பல்கிப் பெருகுகின்றன நோன்பைத் தவிற, நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், எனது அடியான் எனக்காக தனது உணவையும், இச்சiயையும் விட்டு விடுகிறான், என்று இறைவன் கூறுவதாக பெருமானார்(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். புகாரி, முஸ்லீம்.

சனி, 7 ஆகஸ்ட், 2010

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கிளையில் கடந்த நவம்பர் 28, 2009 அன்று ஹஜ் பெருநாள் தொழுகையை நபி(ஸல்) வழியில் திடலில் நிறைவேற்றிட திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில பேச்சாளர் சகோதரர் முஜாஹித் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏரளாமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த முறையில் பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.