திங்கள், 27 ஜூன், 2011
மாணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்தா அணிந்த வந்த மாணவியை T.C. கொடுத்து அனுப்பிய சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நகர முழுதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. உளவுத்துறைக்கும் தகவல் தரப்பட்டது.
இதற்குப் பிறகு பள்ளி நிர்வாகம் தங்களுடைய தவறை உணர்ந்தது பேச்சுவார்த்தைக்கு நகரில் உள்ள ஒரு காங்கிரஸ் பிரமுகர் மூலம் அழைப்பு விடுத்தனர். இன்று 27/06/2011 காரைக்குடி நிர்வாகிகள் பெற்றோரையும் உடன் அழைத்து சென்றனர். அங்கு சென்று பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் தவறுகளை சுட்டி காட்டப்பட்டது.
தவறாக பேசிய ஆசிரிய்ர் மீது நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் வாக்குறுதி அளித்தது. T.C கொடுக்கப்பட்ட மாணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்து கொள்வதாகவும், பள்ளி வளாகத்தில் முஸ்லிம் மாணவிகள் பர்தா உடை மாற்றுவதற்கு அறை ஒன்றும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்கள்.
பின்பு தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் தமிழக்கம் கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !