புதன், 11 ஜூலை, 2012

சமுதாயச் செய்திகள் அனுப்புவோர் கவனத்திற்கு! – Important


இணையதளத்திற்கு அனுப்பபடும் சமுதாயச் செய்திகள் முழுமையான தகவல்களுடன் இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் அவைகள் வெளிவராமல் போய் விடக் கூடும். எனவே இணையதளத்திற்கு செய்திகள் அனுப்வோர் பின் வரும் நடைமுறைகளை கடைபிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நிகழ்ச்சி என்று நடந்தது என தேதி குறிப்பிட்டு எழுதவும். செய்திகளை அதற்குரிய புகைப்படத்துடன் அனுப்பவும். புகைப்படம் மட்டும் அனுப்பாமல் விபரத்துடன் அதற்குரிய செய்தியையும் சேர்த்து அனுப்பவும். உதவிகள் வழங்கும் போது உதவி தொகை எவ்வளவு என்ன உதவி என்பதை குறிப்பிடவும். சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் என்ன தலைப்பில் பேசப்பட்டது என்பதை செய்தியில் குறிப்படவும். உதவிகள் கொடுக்கும் புகைப்படங்களை அனுப்பும் போது படத்தில் உதவி பெறுபவர் யார் என்பதை குறிப்பட்டு எழுதவும் (முகத்தை மறைப்பதற்கு) முடிந்த அளவு செய்திகளை தமிழ் யுனிகோடில் தட்டச்சு செய்து அனுப்பவும் (எளிதில் யுனிகோடில் தட்டச்சு செய்ய link link2) புகைப்படங்கள் எடுக்ககையில் தனி நபரை மட்டும் எடுக்காமல் மக்களோடு சேர்த்து எடுக்கவும். செய்திகளை பல நாட்கள் கழித்து சேர்த்து வைத்து மொத்தமாக தாமதமாக அனுப்பாமல் உடனுக்குடன் அனுப்பவும். செய்திகளில் எந்த மாவட்டம் எந்த கிளை என்பதை குறிப்பிட்டு எழுதவும். மேற்கண்ட நடைமுறைகளை தாங்கள் கடைபிடித்து செய்தி அனுப்பினால் தான் தங்கள் ஊர் செய்திகளை உடன் இணைதயதளத்தில் தெளிவாக,விபரமாக வெளியிட உதவியாக இருக்கும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம். எனவே செய்திகள் அனுப்புவோர் மேற்கண்ட நடைமுறைகளை கடைபிடிக்கவும். நன்றி-tntj.net http://www.tntj.net/49847.html