வெள்ளி, 22 ஜூலை, 2011

ரியாத்தில் நடைபெற்ற சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு..

அல்லாஹ்வின் பேரருளால் 22-07-2011 அன்று காலை 9-30 TNTJ ரியாத் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் சகோதரர் காஜா தலைமையில், நடைபெற்றது. தற்பொழுது பொருளாலர் பொறுப்பில் உள்ள சகோதரர் முகமது அலி, வரவு செலவு கணக்கை வாசித்தார், செயளாலர் சகோதரர் சாகுல் மாவட்ட செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். இதில் எதிர்கால மாவட்ட செயல்திட்டங்கள், எதிர் வரும் 24-07-2011 அன்று நடைபெறவுள்ள சிவகங்கை மாவட்ட பொதுக்குழு, மாவட்டத்திற்க்காக வாங்கப்பட்டுள்ள பிரச்சார வாகனத்திற்க்கு பொருளாதார உதவி சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது, இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !

தீர்மானங்கள்
1. இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 24-07-2011 அன்று சிவகங்கை மாவட்ட பொதுக்குழு நடைபெறவுள்ளது, இதில் சிவகங்கை மாவட்டத்தின் கடந்தகால/ நிகழ்கால அனுபவங்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என மாநில ,மாவட்ட மற்றும் கிளை, நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கோள்கிறது .

2. எதிர் வரும் கூட்டத்தில் [28-08-2011] இன்ஷாஅல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு நிர்வாக சீரமைப்பு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது .

3. மாவட்டத்திற்க்காக வாங்கப்பட்டுள்ள பிரச்சார வாகனத்திற்க்கு பொருளாதார உதவியாக சிறு தொகையை வசூல் செய்து கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

---ரியாதிலிரிருந்து செய்தியாளர்.காரை ஹமீது.