


தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களிடத்திலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வரும் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை முஸ்லிம்கள் மட்டுமின்றி மாற்று மதத்தினரும் மதிக்கின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று டெல்லி சென்று அவர்களை சந்தித்து வந்த அவர் மீது சிலர் அவதூறுகளை கூறியதாக நக்கீரன் பிரசுரித்துள்ளது. நக்கீரனின் இந்த கயமைத்தனத்தை சகோதரர் அப்துர் ரஹ்மான் தாவத்தி அவர்கள் கடுமையாக கண்டித்து உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் ஆண்களும் பெண்களும் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.